Thursday, December 29, 2011

தொழில் பற்றி ...தொடர்ச்சி ....

பருத்தி 
பருத்தி அயன் மற்றும் துணை அயனப் பகுதிகளில் மட்டுமே விளையும் இழைப் பயிராகும்.செடியிலிருந்து நாம் பலவிதமாக பயன்படுத்தும் மெதுமையான பருத்தி இழைகள் கிடைக்கின்றன. இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம். பருத்தி செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது.
பருத்தி ஒரு நல்ல பணப்பயிர். பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும் போது ஏறத்தாழ 10% மட்டுமே வீணாகிறது. இவ்விழைகளிலுள்ள சிறிதளவு புரதம்மெழுகு போன்றவை நீக்கப்படும்போது மற்றனைத்தும், தூய இயற்கையான செல்லுலோஸ் பல்கூறு (பாலிமர்) ஆகும். இவ்விழைகளில் செல்லுலோஸின் அமைப்பு முறை பஞ்சுக்கு உறுதியும், நிலைப்புத்தன்மையும், உறிஞ்சும் தன்மையும் தருகின்றன. ஒவ்வொரு இழையும் 20 - 30 செல்லுலோசுப் பல்கூறுகள் முறுக்கப்பட்டு உருவாகின்றன. பருத்திகாய் வெடிக்கும் போது அல்லது உடைக்கப்படும் போது, எல்லா இழைகளும் முறுக்கிய நாடாக்கள் போல சிக்கிக்கொண்டு உலர்கின்றன. இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள பஞ்சு நூல் நூற்க மிக ஏதுவானதாகும்.

நில நடுக்கோட்டுப் பகுதியில் பருத்தி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மெல்லிய துணிகள், ஆடைகள் தயாரிக்கப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.எகிப்தியர்கள் கி.மு 12000 த்திலேயே பருத்தியை பயன் படுத்தியதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மெக்சிகோ நாட்டு குகைகளில் 7000 ஆண்டு (சுமார் கி.மு 5000) பழமையான பருத்தி துணிகள் காணப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் இந்தியாவிலும் மெக்சிகோவிலும் பல்வேறு வகை பருத்தி செடிகள் வளர்க்கப்பட்டதற்கு அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் உள்ளன. பருத்தி, சிந்துவெளிப் பகுதியில் கிமு 5 ஆம் ஆயிரவாண்டுக்கும் கிமு 4 ஆம் ஆயிரவாண்டுக்கும் இடையில் அங்கு வாழ்ந்தோரால் பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது. சிந்து வெளியின் பருத்தித் தொழில் நன்கு வளர்ச்சியடைந்து இருந்ததுடன், அக்காலத்துப் பருத்தித் தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியாக இன்றும் தற்கால இந்தியாவில் பருத்தி நூல் நூற்றலும், உற்பத்தியும் முன்னணியில் உள்ளது. கி.மு 1500 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ரிக்-வேதத்திலும் பருத்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 2500 ஆம் ஆண்டு இந்திய பருத்தி பற்றி புகழ் பெற்ற கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸ் "அங்கு செம்மறி ஆட்டிலிருந்து கிடைப்பதை விட அழகான, அதே அளவு தரமான கம்பளி, காடு போல் வளரும் மரங்களில் உள்ளது. இந்திய மக்கள் இம் மரக் கம்பளி இழையிலிருந்து உடைகள் செய்து கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார் (புத்தகம் iii. 106)

.வரலாறு

கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகத் திறமையாகப் பருத்தியிலிருந்து துணிகளை நெய்வதற்கு அறிந்திருந்தனர். இப் பருத்தித் துணிகளின் பயன்பாடு இங்கிருந்து நடுநிலக்கடல் பகுதிகளுக்குப் பரவியது. முதலாம் நூற்றாண்டளவில் அராபிய வணிகர்கள் மஸ்லின்கலிக்கோ வகைத் துணிகளை இத்தாலிஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குக் கொண்டு வந்தனர். முஸ்லிம்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்பெயினில் பருத்திப் பயிர்செய்வதை அறிமுகப் படுத்தினர். ஃபுஸ்தியன் (Fustian), டிமிட்டி (dimity) ஆகிய பருத்தித் துணிவகைகள் அங்கே நெய்யப்பட்டன. 14 ஆம் நூற்றாண்டில் வெனிஸ்மிலான்ஆகிய பகுதிகளிலும் இது பரவியது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிகவும் குறைந்த அளவு பருத்தித் துணிகளே இங்கிலாந்துக்கு இறக்குமதியாயின. 17 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பனி அரிய பருத்தித் துணிகளை இந்தியாவிலிருந்து கொண்டுவந்தது.
தாயக அமெரிக்கர்களும் பருத்தியிலிருந்து ஆடைகளை நெய்ய அறிந்திருந்தனர். பெரு நாட்டுக் கல்லறைகளில் காணப்பட்ட பருத்தித் துணிகள் இன்காப் பண்பாட்டுக் காலத்துக்கு முந்தியவை.
கிரேக்க காலத்தில் பருத்தி ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பொருளாகவே அறியப்பட்டது. அம்மக்கள் செம்மறியாட்டுக் கம்பளி தவிர வேறெந்த இழையும் அறிந்திருக்கவில்லையாதலால், பருத்தி மரம் சிறு செம்மறியாடுகளைக் கொண்டதாகவே கற்பனை செய்து கொண்டனர். 1350 இல் ஜான் மான்டவில் என்பவர் எழுதியதாவது "இந்தியாவில் வளரும் இந்த அற்புதமான செடி அதன் கிளை நுனிகளில் சிறு செம்மறியாடுகளைக் கொண்டிருந்தது. இக்கிளைகள் ஆடுகளுக்குப் பசித்த போது கீழ் நோக்கி வளைந்து அவற்றை மேய விட்டன". (பார்க்க படம்). இன்றும் பல ஐரோப்பிய நாடுகளில் பருத்தியை குறிக்கும் சொல் இதனை நினைவு படுத்தும் விதமாகவே உள்ளது (எ.கா. ஜெர்மனியில் பருத்தி "மரக்கம்பளி இழை" என்ற பொருளில் பொம்வுல் என்று அழைக்கப்படுகிறது).
அமெரிக்காக் கண்டத்தில் மிக முந்திய பருத்திப் பயிருடுதல் மெக்சிக்கோவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்றதாகத் தெரிகிறது. கொசிப்பியம் ஹிர்சுட்டம் (Gossypium hirsutum) என்னும் பருத்தியினமே அங்கு பயிரானது. இவ்வினமே இன்று உலகில் அதிகம் பயிராகும் பருத்தி வகையாகும். இது உலகப் பருத்தி உற்பத்தியின் 90% ஆக உள்ளது. மெக்சிக்கோவிலேயே உலகில் மிகவும் அதிக அளவு காட்டுப் பருத்தி இனங்கள் காணப்படுகின்றன. இதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவிலும்ஆப்பிரிக்காவிலும் கூடிய அளவு பருத்தி இனங்கள் உள்ளன. பெரு நாட்டில், தாயகப் பருத்தி இனமான கொசிப்பியம் பார்படென்சு (Gossypium barbadense) என்னும் இனமே அங்கு நோர்ட்டே சிக்கோமோச்சேநாஸ்க்கா போன்ற கரையோரப் பண்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. ஆற்றின் மேற்பகுதிகளில் உற்பத்தியான பருத்தியிலிருந்து வலைகள் பின்னிக் கரையோர மீனவர்களுக்கு வழங்கி அவர்களிடம் இருந்து பெருமளவு மீன்களை வாங்கினர். 1500 களின் தொடக்கத்தில் அங்கு சென்ற எசுபானியர்கள் அப்பகுதி மக்கள் பருத்தி பயிரிடுவதையும், அதிலிருந்து ஆடைகள் செய்து அணிவதையும் கண்டுள்ளனர். 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பருத்தி ஆப்பிரிக்காயூரேசியா மற்றும் அமெரிக்காவின் வெப்பமான பகுதிகளில் பயிர் செய்யப்பட்டது.
18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியரின் விரிவாக்கத்தையும், குடியேற்றவாத ஆட்சி நிறுவப்பட்டதையும் தொடர்ந்து இந்தியாவின் பருத்தித் தொழில்துறை படிப்படியாக நலிவடையத் தொடங்கிற்று. பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியினர், இந்தியாவின் பருத்தி நூற்பு ஆலைகளையும், ஆடை உற்பத்தி நிலையங்களையும் மூடி, இந்தியாவை மூலப்பொருளாகப் பருத்தியை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இறக்கினர். இப் பருத்தியிலிருந்து இங்கிலாந்தில் செய்யப்பட்ட துணிவகைகளைக் கொண்டுவந்து இந்தியாவில் விற்றுப் பொருளீட்டினர். இங்கிலாந்தின் தொழில் புரட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட நூற்பு இயந்திரங்களும், இந்திய பருத்தி தொழில் நசிவடைந்ததற்கான காரணமாகும்.
தொழிற்புரட்சிக் காலத்தில் இங்கிலாந்தில் பருத்தித் தொழில் பெரு வளர்ச்சி கண்டதுடன், துணி வகை இங்கிலாந்தின் முன்னணி ஏற்றுமதிப் பொருளாகவும் ஆனது. இங்கிலாந்தின் பர்மிங்காமைச் சேர்ந்த லூயிஸ் பால் (Lewis Paul), ஜான் வியாட் (John Wyatt) ஆகியோர் உருளை நூற்பு இயந்திரத்தையும், பருத்தியிலிருந்து சீரான அளவில் நூலை நூற்பதற்கான முறையையும் உருவாக்கினர். பின்னர் 1764 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்பு ஜெனி (spinning jenny), 1769ல் ரிச்சார்ட் ஆர்க்ரைட்டினால் உருவாக்கப்பட்ட நூற்புச் சட்டம் (spinning frame) என்பன பிரித்தானிய நெசவாளர்கள் விரைவாக நூல் நூற்கவும், துணி நெய்யவும் உதவின. 18 ஆம் நூற்றாண்டில் இறுதியில் பிரித்தானிய நகரமான மான்செஸ்டரில் பெருமளவில் பருத்தித் தொழில் நடைபெற்றதனால் அதற்கு காட்டனோபோலிஸ் (cottonopolis) என்னும் பட்டப்பெயர் வழங்கியது. அத்துடன் மான்செஸ்டர் உலகப் பருத்தி வணிகத்தின் மையமாகவும் ஆனது. 1793 ஆம் ஆண்டில் எலி விட்னி என்பவர் கண்டுபிடித்த, விதையிலிருந்து பஞ்சைப் பிரித்தெடுக்கும் பருத்தி ஜின் (cotton gin) என்னும் இயந்திரம் உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்தது. மேம்பட்டுவந்த தொழில்நுட்பமும், உலகின் சந்தைகளில் அவர்களுக்கிருந்த கட்டுப்பாட்டு விரிவாக்கமும், உலக வணிகச் சங்கிலித் தொடர் ஒன்றை உருவாக்கப் பிரித்தானியருக்கு உதவியது. குடியேற்ற நாடுகளில் இருந்த பருத்திப் பெருந்தோட்டங்களில் இருந்து வாங்கிய பருத்தியை, இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று லங்காஷயரில் இருந்த ஆலைகளில் துணிகளாக உற்பத்தி செய்து, அவற்றைப் பிரித்தானியக் கப்பல்கள் மூலம் சாங்காய்ஹாங்காங் ஆகிய நகரங்களூடாக மேற்கு ஆப்பிரிக்காஇந்தியாசீனா ஆகியவற்றுக்குக் கொண்டு சென்று விற்றனர்.
1840களில், இயந்திரமயமான இங்கிலாந்தின் ஆலைகளுக்கு வேண்டிய பெருமளவு பருத்தியை வழங்கும் திறனை இந்தியா இழக்கத் தொடங்கியது. அத்துடன், பெருமளவு இடத்தை அடைக்கும், விலை குறைவான பருத்தியைக் கப்பல் மூலம் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்வது செலவு கூடிய ஒன்றாகவும் இருந்தது. அதே நேரம், அமெரிக்காவில் தரம் கூடிய கொசிப்பியம் ஹிர்ஸ்சுட்டம்கொசிப்பியம் பார்படென்சு ஆகிய தாயகப் பருத்தி இனங்களின் செய்கை வளர்ச்சியடைந்து வந்தது. இவ்வினப் பஞ்சுகளின் இழைகள் நீளமானவையாகவும், வலுவானவையாகவும் இருந்தன. இக் காரணிகள் பிரித்தானிய வணிகர்களை அமெரிக்காவிலும், கரிபியப் பகுதிகளிலும் இருந்த பெருந் தோட்டங்களிலிருந்து பருத்தியை வாங்குவதற்குத் தூண்டின. இது கூலி பெறாத அடிமைகளினால் உற்பத்தி செய்யப்பட்டதால் மலிவானதாகவும் இருந்தது. அமெரிக்காவில், பருத்தி, இன்டிகோ மற்றும் புகையிலை வளர்ப்பு அடிமை மக்களின் தொழிலாக இருந்து வந்தது. பின்னர் அடிமைகள் சம-உரிமை பெற்ற பிறகு குத்தகை முறை வேளாண்மையிலும் அவர்கள் இவற்றையே பயிர் செய்தனர்.
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகப் பருத்தியே விளங்கியது. அமெரிக்காவில் அடிமைகளின் முக்கிய தொழிலாகவும் இது ஆனது. அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில், தென்பகுதித் துறைமுகங்கள் ஒன்றியத்தினால் தடுக்கப்பட்டபோது அமெரிக்காவின் பருத்தி ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது. பிரித்தானியாவைக் கூட்டமைப்பு அரசை ஆதரிக்குமாறு தூண்டும் என்ற நம்பிக்கையில், ஒரு உத்தியாகக் கூட்டமைப்பு அரசாங்கம் பருத்தி ஏற்றுமதியைக் குறைத்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இங்கிலாந்தும்,பிரான்சும் எகிப்திலிருந்து பருத்தியை இறக்குமதி செய்தன. பிரித்தானிய, பிரான்சிய வணிகர்கள் எகிப்தியப் பெருந்தோட்டங்களில் பெரும் முதலீடுகளைச் செய்தனர். எகிப்தின் அரசுத் தலைவரான இஸ்மாயிலும் ஐரோப்பிய வங்கிகளிலிருந்து பெருந்தொகை கடன் பெற்றிருந்தார். 1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின்னர் எகிப்தின் பருத்தியைக் கைவிட்ட பிரித்தானியரும், பிரான்சியரும் மீண்டும் மலிவான அமெரிக்கப் பருத்தியை வாங்கத் தொடங்கினர். இதனால், எகிப்து பணப் பற்றாக்குறையினால் 1876 ஆம் ஆண்டில் வங்குரோத்து நிலையை அடைந்தது. இது 1882ல் எகிப்து பிரித்தானியப் பேரரசுடன் இணைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் ஆகியது.
இக்காலத்தில் பிரித்தானிய பேரரசின் பிற பகுதிகளிலும், குறிப்பாக இந்தியாவில் பருத்தி உற்பத்தி கணிசமாக அதிகரித்தது. இது அமெரிக்காவின் தென்பகுதிகளில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை ஈடு செய்தது. வரிகளை விதிப்பதன் மூலமும் பிற கட்டுப்பாடுகளாலும் இந்தியாவில் துணி உற்பத்தி செய்வதைக் குடியேற்றவாத அரசு தடுத்துவந்ததுடன், பருத்தியை மூலப் பொருளாகவே இங்கிலாந்துக்கு அனுப்பியது. இது குறித்து மகாத்மா காந்திபின்வருமாறு விவரித்தார்:
பிரித்தானியர், இந்தியக் கூலிகளால் நாளொன்றுக்கு 7 சதம் பெற்றுக்கொண்டு அறுவடை செய்யும் பருத்தியை வாங்குகிறார்கள். அவர்கள் அதனை மூன்று வாரக் கடற்பயணத்தின் மூலம் இலண்டனுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதற்காக நூறுவீத இலாபத்தைப் பெறும் அவர்கள் அதனைக் குறைவு என்கின்றனர். இப் பருத்தி லங்காஷயரில் துணியாக நெய்யப்படுகிறது. இந்தியர் பென்னிகளைப் பெற்றுக்கொண்டு செய்யும் இவ் வேலைக்குப் பிரித்தானியருக்கு ஷில்லிங்குகள் கூலியாகக் கொடுக்கப்படுகின்றன. அத்துடன் பிரித்தானிய உருக்காலைகள் தொழிற்சாலைகளைக் கட்டுவதன் மூலமும், இயந்திரங்களை உற்பத்தி செய்வதன் மூலமும் இலாபம் பெறுகின்றன. இவையனைத்தும் இங்கிலாந்திலேயே செலவு செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஐரோப்பியக் கப்பல்களுக்குக் கட்டணம் கொடுத்து இந்தியாவுக்கு எடுத்து வருகிறார்கள். இதிலும், ஐரோப்பியர்களான கப்பல் தலைவர்களும், அலுவலர்களும், மாலுமிகளுமே பயன்பெறுகிறார்கள். கொண்டுவரப்பட்ட துணிகள் இந்தியாவில் அரசர்களுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் விற்கப்படுகிறது. இவர்கள் 7 சதம் கூலிபெற்று வேலை செய்யும் ஏழைக் குடியானவர்களிடமிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு இத்தகைய விலையுயர்ந்த துணிகளை வாங்குகிறார்கள்.
1996 ஆம் ஆண்டு பெரும்பாலான புழு வகையான அழிக்கும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட மரபணு பி.டி பருத்தி (XXX) எனும் மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அறிமுகப் படுத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் குறிப்பாக வாரங்கல் பகுதியில் ஸ்போடாப்டிரா புழுவினால்தாக்கப்பட்டு அழிந்த பருத்தி பயிரால் ஏற்பட்ட இழப்பால் நூற்றுக்கணக்கான பருத்திப் பயிர்த்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

உற்பத்தி

தற்போது பருத்தி ஆசியாஐரோப்பாஆப்பிரிக்காஅமெரிக்காஆஸ்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது. அதிக அளவில் பஞ்சு இழைகளை உருவாக்கவல்ல வகைகள் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டில் 330,000 ச.கி.மீ. பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு, 2000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2.1 கோடி டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டது.
பருத்தி விவசாயிகள் பெரும்பாலும் வேதி உரங்களையும், பூச்சி மருந்துகளையும் நம்பியுள்ளனர். அண்மைக்காலங்களில், சில பயிர்த்தொழிலாளர்கள் இயற்கை பயிர்த்தொழில் முறையில் பருத்தி பயிரிடத் துவங்கியுள்ளனர். அமெரிக்கவைப் பொருத்தவரை பஞ்சுக்காய் வண்டு (Boll weevil) ஒரு முக்கியமான அழிவிக்கும் பூச்சியாகும். இந்தியாவில், பஞ்சுக்காய் புழு (Boll worm) மற்றும் ஸ்போடாப்டிரா (Spodoptera exigua) புழுக்கள் அதிக அளவில் சேதம் விளைவிக்கின்றன.
மேலை நாடுகளில் பஞ்சு பெரும்பாலும் இயந்திரங்களின் உதவியுடன் அறுவடை செய்யப்படுகிறது. இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ இலைகள் உதிர்ந்ததும் பஞ்சுக்காய்கள் பறிக்கப்படுகின்றன அல்லது தகுந்த வகையினங்களில் பஞ்சு மட்டும் காயிலிருந்து பறிக்கப்படுகிறது. நில நடுக்கோட்டுப் பகுதியில் பஞ்சு பல போகங்கள் தொடர்ந்து வளரக்கூடியது.

பயன்கள்

பருத்தி முக்கியமாக உடை தயாரிக்க பயன் படுகின்றது, மற்றும் மீன்பிடி வலைகள், கூடாரங்கள், புத்தக அட்டைகள் ஆகியவற்றிலும் பருத்தி பயன் படுத்தப்படுகிறது. சீனர்கள் உருவாக்கிய முதல் காகிதம் பஞ்சு இழைகளைக்கொண்டே உருவாக்கப்பட்டது. தற்போதைய அமெரிக்க டாலர் நோட்டும், அரசாங்க காகிதங்களும் பஞ்சு இழை கலந்தே செய்யப்படுகின்றன. டெனிம் எனும் உறுதியான முரட்டுத்துணி வகை பெரும்பாலும் பருத்தியைக் கொண்டே செய்யப்படுகிறது.
பஞ்சு பிரிக்கப்பட்ட, பருத்தி விதைகளிலிருந்து பருத்திக்கொட்டை எண்ணை ஆட்டப்படுகிறது. சுத்தகரிக்கபட்ட பின், இது மனிதர்களால் மற்ற சமையல் எண்ணைகள் போலவே பயன் படுத்தப் படுகிறது. எண்ணை பிரித்த பின் கிடைக்கும் புண்ணாக்கு, விலங்குகளுக்குத் தீவனமாக பயன் படுகிறது.

வணிக நீதி இயக்கம்

பருத்தி உலகெங்கிலும் ஒரு முக்கியமான பணப்பயிராக இருப்பினும், வளரும் நாடுகளிலுள்ள பருத்து வேளாளர்களுக்கு குறைந்த அளவே ஊதியம், இலாபம் கிடைக்கிறது. அவர்களால் முன்னேறிய நாடுகளிலுள்ள பெரும் வேளாளர்களுடன் போட்டியிட முடிவதில்லை. இது [வணிக நீதி இயக்கம்] மூலம் சில நாடுகளில் சரி செய்யப்படுகிறது.

முன்னாள் பஞ்சு அளவைகள்

  • 1 திரட் = 54 அங்குலம் (சுமார் 137 செ.மீ)
  • 1 ராப் அல்லது ஸ்கீன் = 80 திரட்கள் (சுமார் 109 மீ)
  • 1 ஹேங்க் = 7 ஸ்கீன் (சுமார் 768 மீ)
  • 1 ஸ்பின்டில் = 18 ஹேங்க் (சுமார் 13.826 கி.மீ)

மக்காசோளம் 

மக்காச்சோளம் (இலங்கையில் 'சோளம்', அறிவியல் பெயர்/தாவரவியல் பெயர் - Zea mays) உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியம். உலகில் அதிகம் பயிரிடப்படும் பயிர் இதுவே ஆகும். உலகின் சோள உற்பத்தியில் பாதியளவு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதுதவிர இந்தியாசீனாபிரேசில்பிரான்ஸ்,இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது. இவற்றைப் பெரும்பாலும்சோளப்பொரி செய்யவே பயன்படுத்துகின்றனர்.
இது முதலில் நடு அமெரிக்காவில் பயிரிடப்பட்டு பின்னர் அமெரிக்காக் கண்டம் முழுதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. அமெரிக்காவில் அதிகம் பயிரிடப்படும் பயிர்மக்காச்சோளம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 270 மில்லியன் தொன்கள் எடைகொண்ட மக்காச்சோளம் உற்பத்தியாகிறது. பொதுவான மக்காச்சோளப் பயிரைக் காட்டிலும், கலப்பின மக்காச்சோளப் பயிர்கள் அதிக விளைவைத் தருவதால் விவசாயிகள் கலப்பினங்களையே பெரிதும் விரும்புகிறார்கள். சில மக்காச்சோளத் தாவரங்கள் 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை வளர்கின்றன. எனினும் பெரும்பாலான வணிக அடிப்படையில் பயிராகும் மக்காச்சோளத் தாவரங்கள் 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளர்கின்றன. இனிப்பு மக்காச்சோள வகைகள் பிற மக்காச்சோள வகைகளிலும் குட்டையானவை.

உடற்தோற்றம்

மக்காச்சோளத் தண்டுகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது மூங்கிலின் வடிவத்தை ஒத்தது. இவற்றில் கணுவிடைகள்20 - 30 சதமமீட்டர் அளவு கொண்டவையாக உள்ளன. மக்காச்சோளம் தனித்துவமான வடிவம் கொண்டதாக வளர்கின்றது. கீழ்ப்பகுதி இலைகள் 50-100 சதமமீட்டர் (சமீ) நீளமும், 5-10 சமீ அகலமும் கொண்டவை. தண்டுப் பகுதி நிமிர்ந்த நிலையில் 2-3 மீட்டர்கள் வரை வளர்கின்றது.

ஒளிப்படக் காட்சியகம்

No comments:

Post a Comment

- Copyright © VELAYUDHAM developer - velayudham - Powered by Blogger - Designed by velayudham -