Thursday, December 29, 2011

தொழில் பற்றி .....

வணக்கம் 
   எனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது .... ஆனால் வலிமையானது மற்றும் நேர்மையானது ....


எனது தந்தை விவசாயி ...எங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது .. அதில் 
நங்கள் பயிரிடும் விவசாயம் இதோ.....

  • நெல் 
  • வாழை 
  • முல்லை பூ 
  • மல்லி பூ 
  • கனகாம்பரம் 
  • பருத்தி
  • மக்காசோளம்

நெல்லை பற்றி 
நெல் பயிரிட முதலில் நெல் நாற்று வைத்து இருபது நாள் முதல் முப்பது நாள் வரை நாற்றை வளர விடவேண்டும் பிறகு தேவை யான அளவுக்கு நிலத்தை பத படுத்தி அப்புறம் பயிரிட வேண்டும் ..



சரியான முறையில் நீர் பாச்சி குறைந்தது முன்று முதல் ஆறு மாதம் வரை பாதுகாத்து பிறகு அறுவடை செய்யவேண்டும் ...
நெற் பயிர் புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது தென்கிழக்காசியாவில் தோன்றியது. நெற் பயிர் ஈரநிலங்களில் வளரக்கூடியது. இது சராசரியாக ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடிய ஓர் ஆண்டுத் தாவரமாகும். இப்பயிரின் விதையின் உமி என அழைக்கப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதை அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது. நெல், சோளம்கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் ஆகும்.

உலகில் முதன் முதலாக ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இரு இன நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.வரலாறு

ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் Oryza rufipogan ஆகும். ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப்பகுதியில் Oryza sativa var. indica வும், சீனப்பகுதியில் Oryza sativa var. japonica வும் தோன்றின.

நெல்மணிகள்
இந்தியாவில்அவ்வையார் மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் பற்றிய சில சமஸ்கிருத குறிப்புகளும் உள்ளன. சீனாவில், விவசாயம், நெல் ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல் ஒன்றே (XXX) ஆகும்.
ஆப்பிரிக்காவில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 1500 - 800 ஆம் ஆண்டுகளில், நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் செனெகல் நாடு வரை பரவியது. எனினும், இதன் சாகுபடி மேற்கொண்டு பரவவில்லை. அரேபியர்களால் கி.பி 7 - 11 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன.
ஜப்பானில் நெற்பயிர் சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால், ஜப்பானியர்கள் முன்னாளில் நீளமான தண்டுடைய, நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்ததாக சில குறிப்புகளும் உள்ளன. உலர்நில (மானாவாரி) நெல் சாகுபடி கி.மு 1000 ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில், கி.மு 300 இல் தற்கால நீர்நில சாகுபடி முறை யாயோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆசிய நெல் இனம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் சுமார் கி.மு 800 இல் பயிரிடத் துவங்கப்பட்டது. மவுரியர்கள் நெற்பயிரைஸ்பெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல் இத்தாலிபிரான்ஸ் நாடுகளுக்கும் பின்னர் எல்லா கண்டங்களுக்கும் பரவியது. 1694இல் அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், மடகாஸ்கரிலிருந்து நெல் அறிமுகமானது. புயலால் பாதிப்படைந்து 'சார்ல்ஸ்டன்' என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலின் தலைவர் ஒரு நெல் மூட்டையை அங்குள்ள விவசாயிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர்கள் அதனை பயிரிடத் தொடங்கினர். தென் அமெரிக்காவில் நெல் 18ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
முந்தைய அமெரிக்காவின் தென் கரோலினா, ஜார்ஜியா மாகாணங்கள், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகள் மூலம் நெல் பயிர் செய்து மிக அதிக இலாபம் ஈட்டினர். இவ்வடிமைகளுக்கு முன்னமே நெல் பயிர் பற்றிய அறிவு இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். நில முதலாளிகள் அடிமைகளிடமிருந்து பாத்தி கட்டுதல், நீர் தேக்குதல் போன்ற உத்திகளை தெரிந்து கொண்டனர். முதலில் அமெரிக்காவில், நெல் கையால் (மர உலக்கை கொண்டு) குத்தப்பட்டு, பின் கூடைகளில் புடைக்கப்பட்டு அரிசி பிரித்தெடுக்கப்பட்டது. இவ்வுத்திகளும் ஆப்பிரிக்க அடிமைகளே அறிமுகப்படுத்தினர். பின்னர் 1787 இல், நீரால் இயங்கும் அரிசி அரவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நெல் சாகுபடி நல்ல இலாபம் ஈட்டியது. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்க உள்னாட்டு போருக்குப் பின் அடிமைகள் இல்லாமையால் நெல் சாகுபடி குறைந்து விட்டது.


உற்பத்தி

உலக நெல் உற்பத்தி 1960 ஆம் ஆண்டில் 20 கோடி டன்களிலிருந்து சீராக உயர்ந்து 2004 இல் 60 கோடி டன்களாய் இருந்தது. அரிசி உற்பத்தி நெல் அளவில் சராசரியாக 68% ஆகும். 2004இல் சீனா (31%), இந்தியா (20%) மற்றும் இந்தோனேசியா (9%) நாடுகள் உலக நெல் உற்பத்தியில் முன்னிலை வகித்தன.
உலக அளவில் மிக சிறிதளவே (உற்பத்தியில் 6%) நெல் ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதியில், தாய்லாந்து (26%), வியட்நாம் (15%), அமெரிக்கா (11%) ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. இந்தோனேசியாவங்கதேசம்பிரேசில் ஆகிய நாடுகள் அதிக அளவில நெல் இறக்குமதி செய்கின்றன.

உலக அரிசி உற்பத்தி
ஆகக் கூடுதலாக அரிசி உற்பத்தி செய்யும் நாடுகள் — 2007
(million metric ton)[1]
சினாவின் கொடி மக்கள் சீன குடியரசு197
இந்தியாவின் கொடி இந்தியா131
இந்தோனேசியா கொடி இந்தோனேசியா64
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்45
வியட்நாம் கொடி வியட்நாம்39
தாய்லாந்து கொடி தாய்லாந்து31
மியான்மாரின் கொடி மியான்மார்31
Flag of the Philippines பிலிப்பைன்ஸ்16
பிரேசிலின் கொடி பிரேசில்13
சப்பான் கொடி சப்பான்11
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்10
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா10
Source:
Food and Agriculture Organization

[தொகு]நெல் சாகுபடி


நெல் வயலில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி
உலகில் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவான அரிசி நெற்பயிரிலிருந்தே கிடைக்கிறது. உலகில் அதிகம் உண்ணப்படும் தானியம் அரிசியே ஆகும். உலகில், சோளத்திற்கும், கோதுமைக்கும் அடுத்ததாக, அதிகம் பயிரிடப்படுவது நெல்லே ஆகும்.
நெற்பயிர் மலிவாக வேலையாட்களும், அதிக மழையோ மற்ற நீராதாரங்களோ உள்ள பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. அதிக அளவில் மனித உழைப்பும், நீரும் நெல் பயிரிட தேவைப்படுகின்றன. இருப்பினும், மலைசாரல்களிலும் நெல் பயிரிடப்படுகிறது. ஆசியாவில் தோன்றினாலும், தொன்றுதொட்டே செய்யப்பட்ட நெல் வணிகத்தின் மூலம், அது உலகெங்கும் பயிரிடப்படுகிறது.
நெற்பயிர் நீர் தேங்கிய பாத்திகளில் வளர்க்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில், சுமார் 15 செ.மீ நீர் தேக்கப்படுவதால், சில நாடுகளில் நெல்லுடன் மீன்களும் வளர்க்கப்படுகின்றன. நெற்பாத்திகள் நீர் தேக்கி வளர்க்கப்படுவதால், இயற்கையாகவே களைசெடிகள் குறைவாக இருக்கும்.


மண், தட்பவெப்பம்


விதைத்தல், நடுதல்

Ploughing.ogg
நிகழ்படமாக, பரம்படித்தலைப்பாரீர்.

நெல்மணி

நெல்மணி

நெற்பதர்கள்
நீராதாரத்தைப் பொருத்து நெல் 'உலர்நில முறை' அல்லது 'நீர்நில முறை' ஆகிய முறைகளில் பயிரிடப்படுகிறது. உலர்நில முறையில், விதைகள் நேரடியாக விளைநிலத்தில் விதைக்கப்பட்டு, பின் முளைத்தலுக்கேற்ப அதிகப்படியான நெல் நாற்றுக்கள் களையப்படுகின்றன. நீர்நில முறையில், நெல் விதைகள் நாற்றங்கால் எனப்படும் சிறு நிலத்தில் விதைக்கப்பட்டு நாற்றுக்கள் பின்னர் விளை நிலத்தில் சரியான இடைவெளியில் நடப்படுகின்றன. இம்முறைகளின் பெயர் குறிப்பிடுவது போல, நீர்நில முறைக்கு அதிக நீர் தேவை.


நாற்றங்கால் அமைத்தல்

நீர் நில நெல் சாகுபடியில் நாற்றங்கால் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, ஒரு ஏக்கர் நிலத்திற்கு, ஒரு சென்ட் (அதாவது, நடவுவயல் பரப்பில் 10%) நாற்றங்கால் தேவை. நடவுக்கு ஒரு மாதம் முன்பாக நாற்றங்கால் தயார் செய்யப்படுகிறது. நாற்றங்கால் நில மண் கட்டிகளின்றி நன்றாக தூளாகும் வரை உழுது, நீர் பாய்ச்சப்படுகிறது. சில விவசாயிகள், உழுவதற்கு சில நாட்கள் முன், நிலத்தில் நீர் பாய்ச்சுகின்றனர். இது களை விதைகளை முளைக்கச்செய்கிறது. பின்னர் உழும்போது, களைச்செடிகள் நிலத்தில் புதைக்கப்படுவதால் களை நிர்வாகம் குறைகிறது. ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு சுமார் 200 கிலோ மாட்டுச்சாண உரமிட்டு மீன்டும் ஈரநிலம் உழப்படுகிறது. பின், ஓரங்களில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, நடுவில் சற்றே மேடாக ஆனால் சமமாக இருக்குமாறு நிலம் சமன் செய்யப்படுகிறது. அடியுரமாக, 5- 10 கிலோ தழைச்சத்து (நைட்ரஜன்), 2 கிலோ உயிர்ச்சத்து (பாஸ்பரஸ்), 5 கிலோ மணிச்சத்து (பொட்டாசியம்), 3- 4 கிலோ சிங்க் சல்ஃபேட் (Zinc sulphate) இடப்படுகிறது. பின், ஒரு சென்ட் நாற்றங்காலூகு, 10- 12 கிலோ விதை சீராக தூவப்படுகிறது. சில நாடுகளில், விதைத்தபின் நாற்றங்கால் வாழை இலைகள் கொண்டு மூடப்படுகிறது. விதைத்த 5 நாட்களில், தேவைப்பட்டால் கை களையெடுப்போ, களைக்கொல்லியோ தெளிக்கப்படுகின்றன. இரும்பு சத்தின்றி நாற்றுகள் மஞ்சளானால், 2% ஃபெரஸ் சல்ஃபேட் (Ferrous suphate) தெளிக்கப்படுகிறது. நாற்று பறிக்க 10 நாட்களுக்கு முன் (விதைத்து சுமார் 3 வாரங்களில்), மேலுரமாக 1- 2 கிலோ தழைச்சத்து இடப்படுகிறது.


விதை தேர்வு செய்தல்

பொதுவாக, விவசாயிகள் முந்தைய பருவத்திலிருந்தோ மற்ற விவசாயிகளிடமிருந்தோ விதைகளைப் பெறுகின்றனர். அறுவடைக்கு முன், நிலத்தின் நல்ல பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, பிற இரகங்களோ, களைகளோ நீக்கப்படுகின்றன. அறுவடைக்குப்பின், விதைக்கான நெல், கையால் போரடிக்கப்பட்டு (செடியிலிருந்து விதை உதிர்த்தல்), உலர்த்தி, காற்றில் தூற்றப்படுகிறது. பின்னர் விதைகள் பாதுகாப்பாக, பூச்சி தாக்குதலை தடுக்க நொச்சி இலைகள் அல்லது வேப்பிலைகள் கலந்து வைக்கப்படுகின்றன. விதைக்குமுன், நீரில் இடப்பட்டு மூழ்கும் விதைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.


நடவு வயல் தயாரிப்பு

நாற்றங்காலில் 3 - 4 வாரங்கள் வளர்ந்தபின் நாற்றுகள் பறிக்கப்பட்டு கட்டப்படுகின்றன. இவை பின் சுமார் 5 செ.மீ நீர் தேங்கிய நடவு வயலில் நடப்படுகின்றன. நாற்றுக்கள் குறுவையில் 15 X 10 செ.மீ இடைவெளியும், தாளடியில் 20 X 10 செ.மீ இடைவெளியும் விட்டு நடப்படுகின்றன. ஒவ்வொரு முறை நீர் அளவு குறைந்து நிலம் தெரியும்போதும், நீர் பாய்ச்சி 5 செ. மீ நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. தேவையான தழைச்சத்து பிரித்து உரமாக இடப்படுகிறது. நட்ட ஐந்தாம் நாள் களைக்கொல்லி உபயோகித்தோ அல்லது 15 ஆம் நாள் கையாலோ களைகள் நீக்கப்படுகின்றன.

உர நிர்வாகம், மேம்பாடு

களை நிர்வாகம், மேம்பாடு

அழிக்கும் பூச்சிகளும், நோய்களும்

அறுவடை

திருத்திய நெல் சாகுபடி

உலக நெல்லாராய்ச்சி நிறுவனம் (International Rice Research Institute, IRRI) மற்றும் தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம் ஆகியவை 'திருத்திய நெல் சாகுபடி' முறையை அறிமுகம் செய்துள்ளன. இதன் நோக்கம், நெல்லுக்கான நீர் தேவை, விதையளவு, தழைச்சத்து உரப்பயன்பாடு மற்றும் களை வளர்ச்சி யை குறைப்பதும், இதன் மூலம் அதிக விளைச்சலும், இலாபமும் பெறச்செய்வதும் ஆகும்.
இம்முறைப்படி, நாற்றஙகால் நடவு வயலின் மிக அருகிலேயே அமைக்கப்படுகிறது.

இரகங்கள்

விவசாயிகளைப் பொருத்த வரை நெல் இரகங்கள் பயிரிடும் காலம், முற்றும் காலம், கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சி நிலையம் ஆகிவற்றைப் பொருத்து வகைப்படுத்தப்படுகின்றன.
நுகர்வோரைப் பொருத்தவரை நெல் இரகங்கள் பெரும்பாலும் அவற்றிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவம் மற்றும் குணத்தினால் வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் நீளமான, மணமுடைய 'பாஸ்மதி' அரிசி, நீளமான, சன்னமான 'பாட்னா' அரிசி, குட்டையான 'மசூரி' அரிசி ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன. தென்னிந்தியாவில், நீளமான சன்ன இரக 'பொன்னி' அரிசி பிரபலமானது. தென் மற்றும் கிழக்கிந்தியாவில் அறுவடைக்குப்பின் நெல் நீரில் வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைத்து அரிசியாக்கப்படுகிறது. இவ்வகை அரிசி 'புழுங்கல்' அரிசி என்று அழைக்கப்படுகிறது. கடின நெல் இரகங்களே இதற்கு உகந்தவை. புழுங்கல் அரிசி ஆலையில் தீட்டப்படும்போது, பல சத்துக்களை இழப்பதில்லை; எளிதில் செரிமாணம் ஆகக்கூடியது. ஆனால், வேக வைக்கப்பட்டதால், ஒரு வினோதமான வாசம் உடையதாய் இருக்கும். புழுங்கல் அரிசி தென்னிந்தியாவில் 'இட்லி' தயாரிக்கவும், உழைக்கும் வர்க்கத்தினரால் உணவுக்கும் பயன் படுத்தப்படுகிறது.
தாய்லாந்தின் 'மல்லிகை' அரிசி (Thai Jasmine rice) நீள அரிசி வகை ஆகும். இவ்வகை நீல அரிசியில் அமைலோபெக்டின் குறைவாக இருப்பதால், வேகவைக்கப்படும்போது, ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும். சீனாவிலும், ஜப்பானிலும் பெரும்பாலும், குட்டையான ஒட்டும் தன்மை அதிகமுள்ள அரிசி இரகங்களே பயன்படுத்தப்படுகின்றன. சீன உணவகங்களில் நீளமான சற்றே ஒட்டும் தன்மையுள்ள அரிசி பயன்படுத்தப்படுகிறது.
மணமுடைய அரிசி இரகங்கள் இயற்கையாகவே ஒரே மாதிரியான மாறாத மணம் கொண்டவை. இந்திய இரகங்களான 'பாஸ்மதி', 'பாட்னா' ஆகிய இரகங்கள் உலக அளவில் குறிப்பிடத்தக்கவை. அமெரிக்காவில் 'டெக்ஸ்மதி' என்ற பெயரில் விற்கப்பட்ட ஒரு மண அரிசி இரகம் 'காப்புரிமை' சமப்ந்தமான ஒரு பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இது அமெரிக்க நீள அரிசியையும், பாஸ்மதியையும் கொண்டு உருவாக்கிய கலப்பின அரிசியாகும்.
இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரிசி நிறத்தைப் பொருத்து வெள்ளை, கருப்பு அல்லது சிகப்பு என நெல் இரகங்கள் உள்ளன.
ஆப்பிரிக்கா போன்ற வறண்ட நிலப்பகுதிகளுக்கான அதிக விளைச்சல் தரக்கூடிய நெல் இரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை 'ஆப்பிரிக்காவுக்கான புதிய நெல்' (New Rice for Africa; XXX) என அழைக்கப்படுகின்றன. இவை மேற்கு ஆப்பிரிக்காவில் உணவுப் பஞ்சமில்லாதிருக்க உதவும் என நம்பப்படுகிறது.

நெல் மரபணு ஆராய்ச்சி

நெல் தாவரத்தின் மரபுவரைபடம் (genetic map; எந்த குணத்தை நிர்ணயிக்கும் மரபணு எந்த மரபணுத்தாங்கியில் எவ்விடத்தில் உள்ளது என்ற வரைபடம்) அறியப்பட்டுள்ளது. இவ்வரைபடம் முழுமையாக அறியப்பட்ட முதல் உயர் உயிரினம் என்ற சிறப்பு நெல்லையே சாரும். மேலும், புல் வகை தாவரங்களின் மாதிரியாக நெல் தேர்வு செய்யப்பட்டு, அதன் மொத்த மரபுப்பொருளின் படிமம் (genome sequence) முற்றிலும் அறியப்பட்டு, 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
அரிசியில் உயிர்ச்சத்து ஏ சத்தை அதிகரிக்க பீட்டா-கரோட்டின் அதிகம் கொண்ட 'தங்க அரிசி' என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் இரகம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது. இது தேவையான அளவு பீட்டா-கரோட்டினை தருமா? மரபணு மாற்றம் செய்த உணவுப்பொருட்கள்பாதுகாப்பானவை தானா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.


வாழை ..
 
  வாழை அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத்தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். அனைத்து இன வாழைகளையும் உள்ளடக்கிய வாழைப்பேரினம் அறிவியல் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் இலத்தீன் மொழியில் மியுசா (Musa) எனப்படுகிறது. தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக பப்புவா நியூ கினியில்கொல்லைப்படுத்தப்பட்டது.[1] இன்று அனைத்து வெப்ப வலய பகுதிகளிலும் வாழை பயிரிடப்படுகிறது.[2]
வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காக பயிரிடப்படுகிறது எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும்நார் பெறுவதற்காகவும் வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது. உறுதியாக உயர வளரும் வாழையைமரமாக கருதுவதுண்டு ஆனால் வாழையில் நிலைக்குத்தாக உள்ள பகுதி ஒரு போலித்தண்டாகும். சில இன வாழைகளுக்கு போலித்தண்டு 2 தொடக்கம் 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. அதன் பெரிய இலைகள் 3.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு போலித்தண்டும் ஒவ்வொரு குலை வாழைப்பழங்களைத் தரவல்லது. வாழைக்குலை ஈன்றப்பின்பு போலிதண்டு இறந்து இன்னொரு போலித்தண்டு அதனிடத்தைப் பிடிக்கிறது. வாழைப்பழம், முதன்மையாக மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக தோற்றம் அளிக்கும் ஆனால வாழைப்பழத்தின் நிறமும் அளவும் வடிவமும் இனத்துகினம் வேறுபட்டிருக்கும். வாழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாக கொத்துக்கொத்தாய் (சீப்பு) அமைந்திருக்கும்.
2002 ஆம் ஆண்டு, 6,80,00,000 டன் வாழைப்பழங்கள் விளைவிக்கப்பட்டு 1,20,00,000 டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக வாழை உற்பத்தியில் இந்தியா (24%), ஈக்வடார் (9%), பிரேசில் (9%) ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன.



வரலாறு

தென் கிழக்கு ஆசியாவில் தான் வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது. இப்போதும், மலேசியா,இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். நியூ கினியாவின் குக்சகதிப்பகுதியில் (Kuk swamp) நடந்த அகழ்வாராய்ச்சிகளின் படி அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.[1]

வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு 600 ஆம் ஆண்டு புத்த மத ஏடுகளில் காணப்படுகிறது. மாமன்னர் அலெக்சாந்தர் இந்தியாவில் கி.மு 327 இல் இந்தியாவில் வாழைப்பழத்தை சுவைத்ததற்கான குறிப்புகள் உள்ளன. கி.பி 200 ஆம் ஆண்டில் சீனாவில் ஒழுங்குபடுத்திய வாழை சாகுபடி நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கி.பி 650இல் முகலாயர்கள் இந்தியாவிலிருந்து வாழையை மத்திய கிழக்குப் பகுதிக்கு கொண்டு வந்தனர். அரேபிய வியாபாரிகள் வாழையை ஆப்பிரிக்காவெங்கும் பரப்பினர். பின்னர் போர்ச்சுகீசியவியாபாரிகள் மூலமாக வாழை அமெரிக்காவிற்கு சென்றது.
வாழையின் ஆங்கிலப் பெயர் 'பனானா' (banana) தோன்றியது ஸ்பானிஷ் அல்லது போர்ச்சுகீசிய (மூலம்: வொலோஃப்என்ற ஆப்பிரிக்க மொழி) மொழியிலிருந்து இருக்கலாம். இருப்பினும், வாழையின் அறிவியல் பெயரான 'மூசா' (Musa),அரபுப்பெயரிலிருந்து வந்திருக்கலாம்.
இந்நாட்களில் வெப்பமான பகுதிகளெங்கும் வாழை பயிரிடப்படுகிறது.[3]

[தொகு]வாழைச்செடியின் உறுப்புகள்


வாழையின் உறுப்புகள்

வாழைப் பூங்கொத்து
வாழையின் உறுப்புகள் பிற ஓர்வித்திலைச் செடிகளைப் போன்றே இருந்தாலும் சில சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது.[4]
ஓர்வித்திலைச் செடியான வாழையில் வேர்த்தொகுதி நார்க்கொத்தைப் போல, ஆழமாகச் செல்லாமல் பரவி நிற்கும். இவை இருவித்திலைச் செடிகளில் உள்ளதைப்போல ஆணிவேரைக் கொண்டிருக்க மாட்டா. இதனால் வலுவான காற்றடிக்கும்போது வாழைச்செடிகள் சாய்ந்துவிடக் கூடியவை.
தண்டுப்பகுதி பெரும்பாலான செடியினங்களில் மண்ணுக்கு வெளியே கதிரவனின் வெளிச்சத்தை நோக்கி வளரும். ஆனால், வாழையில் அது கிழங்கு வடிவில் மண்ணுக்கடியில் மட்டுமே வளர்கிறது. வெளியில், செங்குத்தாக வளர்ந்து நிற்கும் தண்டு போன்ற பகுதி இலைக்காம்புகளின் அடிப்பகுதிகள் ஒன்றன்மேல் ஒன்று பற்றி நிற்பதால் உருவாகிய பகுதியாகும். இது போலித்தண்டு எனப்படும். வளர்ந்த செடியில் இவற்றின் ஊடே நடுவில் சற்றே உறுதியான நாராலானது போல் தோன்றும் தண்டுப் பகுதி மலர்க்காம்பாகும்.
இலைக் காம்புகள் மண்ணுள் இருக்கும் கிழங்கிலிருந்தே தோன்றி வளர்ந்து அடுக்கடுக்காக நீளமான இலைகள் தோன்றும். முதிர்ந்த இலைகள் கரும்பச்சை நிறத்திலும் புதியன இளம்பச்சை நிறத்திலும் இருக்கின்றன. புதிதாய் வெளிவரும் குருத்திலை தன் நீளத்தை மையமாகக் கொண்டு சுருண்டு இருக்கும். பின்னர் சிறிது சிறிதாக விரிந்து வளரும். இலைகளில் பாயும் நரம்புகள் நடுத்தண்டிலிருந்து இலையின் ஓரங்களை நோக்கி வரிசையாக ஏறத்தாழ ஒரே அளவு இடைவெளி விட்டு இணையாகப் பாய்கின்றன.
வாழையின் மலர்கள் ஒரு மாறுபட்ட பூங்கொத்தாக இருக்கின்றன. இருபால் உறுப்புக்களையும் கொண்ட பூக்களில் இருந்து முதலில் தண்டின் அடியில் ஆண் பூக்களும், பின்னர் நுனியில் பெண் பூக்களும் உருவாகின்றன.கொல்லைப்படுத்திய வாழையினங்களில் மகரந்தச் சேர்க்கை நடவாமலேயே விதைகளற்ற காய்கள் சீப்புகளில் உருவாகின்றன. அடுக்கடுக்கான சீப்புகள் பூந்தண்டைச் சுற்றிலும் அமைந்திருக்கும். இதை வாழைத்தார் என்பர். இக்காய்கள் படிப்படியாகப் பழுக்கின்றன. பொதுவாக ஒருமுறை தார் போட்டதும் அந்த முளையிலிருந்து வந்த செடி மடிந்து விடும். விதைவழிப் பரவுதல் அரிது, புதிய கன்றுகள் கிழங்கிலிருந்தே தோன்றுகின்றன.

வாழைச் சாகுபடி


வாழையின் விதைகள்

விதைகளுள்ள மூதாதைய காட்டுவாழை

விதைகளற்ற, இன்றைய மரபின வாழை

வாழைச்சீவல் கட்டை
உலகில் இருவகையான வாழைகள் உள்ளன. காயாக சமையலுக்கு பயன்படுவது வாழைக்காய் (plantain), பழமாக உண்ணப்படுவது வாழைப்பழம் (banana). பழ வகை தாவரங்களில் வாழைமரம் மட்டுமேஒருவிதையிலைத் தாவரமாகும். மற்றைய பழமரங்கள்இருவிதையிலைத்தாவரங்களாகும். பழவகை வாழை நல்ல திரண்ட உருளை வடிவ பழங்களைக் கொண்டிருக்கும். காய்வகை வாழைகள் நீளமாக இருந்தாலும் சற்று பட்டையான பக்கங்களுடன் இருக்கும்.
மனிதன் முதலில் பயன்படுத்திய பல காட்டுவாழை இனங்களின், பழங்கள் விதையுடன் இருந்தன. இவற்றுள், முக்கியமானது மூசா அக்கியூமினாட்டா(Musa acuminata)என்னும் வகை ஆகும். இந்தியாவில் மூதாதைய காட்டுவாழைகள் மூசா பால்பிசியனா (Musa balbisiana) விதையுடன் இருந்தன. ஆனால், இவை பூச்சி மற்றும் நோய் தாங்கும் குணமுடையவை. இயற்கையாகவே இவ்விரு சிற்றினங்களும் கலந்து விதைகளற்ற நற்குணங்களுடன் முப்படை மரபணுத்தாங்கிகளுடைய வாழை இனங்கள் உருவாயின மூசா சாப்பியென்ட்டம் (Musa X sapientum). பின்னர், இவை நிலத்தடி வாழைக்கிழங்கு மூலம் இனவிருத்தி செய்யப்பட்டன.
தற்போது வாழை இனங்கள் தங்களின் மூல சிற்றினங்களை குறிக்கும் விதமாக AA, BB, AB, AAA, AAB, ABB அல்லது BBB என அழைக்கப்படுகின்றன. இக்குறியீட்டில், A என்பது மூசா அக்கியூமினாட்டாவையும் (M.acuminata) B என்பது மூசா பால்பிசியனாவையும் (M.balbisiana) குறிக்கும். அதிக அளவில் B மரபணுப்பொருள் கொண்ட வாழைகள் பெரும்பாலும் 'வாழைக்காய்' இனத்தையும், அதிக அளவில் A மரபணுப்பொருள் கொண்ட வாழைகள் பெரும்பாலும் 'வாழைப்பழ' இனத்தையும் சேரும்.

தட்பவெப்பம்


உலகின் வாழைச்சாகுபடி 2005
நீர் அதிகம் கிடைக்கும், நிலநடுக்கோட்டுப்பகுதிகளில் வாழை நன்றாக வளரும். வெப்பநிலை 20 - 30 °C இருப்பது நல்லது. 10 °Cக்கும் கீழே வாழை வளர்ச்சி நின்றுவிடும். உறைபனி வாழை மரத்தைக் கொன்று விடும். ஆனால், நிலத்தடிக் கிழங்கு சாதாரணமாக உறைபனியைத் தாங்கும். மற்றைய காரணிகளை விட, காற்று தான் வாழை விவசாயியின் முக்கிய இடர் (பிரச்சினை). மணிக்கு 30 - 50 கி.மீ வேகமான காற்று, வாழை இலைகளையும், சில சமயம் வாழைக்குலையையும் உடைத்துவிடும். 60 - 100 கி.மீ விரைவுக் காற்றில் மரங்கள் முறிந்து சாய்ந்து வாழைத்தோட்டமே சீர்குலைந்து விடும்.

மண்


குருத்து+கன்று+மரம்
வாழை பலவிதமான மண்வகைகளில் வளரும் தன்மையுடையது. ஆனால், நல்ல வடிகால் வசதி தேவை. நிலம் சற்றேகாடித்தன்மையுடன் (அமிலத்தன்மையுடன்) இருப்பது அவசியம் (காரக்காடித்தன்மை சுட்டெண் pH 6.0). நீர் தேங்கக்கூடிய நிலமாக இருப்பின், உயர்த்தப்பட்ட வரப்புகளில் வாழை நடலாம்.

வாழைக்கன்றுகள்

வாழைக்கன்றுகள் வாழைக்கிழங்கிலிருந்து வளர்கின்றன. கிழங்கின் ஒவ்வொரு முளையும் சுற்றியுள்ள கிழங்குப்பகுதியுடன் துண்டாக்கப்பட்டு தனிக்கன்று வளர்க்கப்படுகிறது. நடுமுன் இம்முளைகளை வெந்நீரிலும், பூச்சிமருந்துகளிலும் நனைக்கின்றனர். இதன்மூலம் நோய் தாக்குதலுக்கான வாய்ப்பு குறைகிறது. திசு வளர்ப்பு முறையிலும்இப்போது வாழைக்கன்றுகள் உருவாக்கப்படுகின்றன. சில பயிர்த்தொழிலாளர்கள் முழுக்கிழங்கையும் நடுகின்றனர். இது விரைவில் காய்க்கும் மரத்தைத் தரும். இருப்பினும் இவற்றில் கிழங்கு மூலம் பூச்சிகளும் நோய்களும் பரவும் வாய்ப்பு அதிகம்.

தோட்டம் அமைத்தல்

வாழைத்தோட்டங்களில் கன்றுகள் இரகத்தைப் பொறுத்து ஏக்கருக்கு 400-800 வீதம் நடப்படுகின்றன. வளர்ந்த பின் நிலத்தில் வெயில் படாதவாறு நெருக்கமாக நடுவது, களை வளர்வதைத் தடுக்கும். முளைக்கும் போது ஒரு கிழங்குக்கு இரு குருத்துகள் மட்டுமே வளர விடப்படுகின்றன. ஒன்று பெரியதாகவும், மற்றது 6-8 மாதங்களுக்குப் பின் பழம் தர வல்லதாயும் விடப்படுகின்றன. இவ்வாறு, ஒரே கிழங்கிலிருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் வேறு குருத்துக்கள் வளர்வதால் சில ஆண்டுகள் கழித்து முன்பு நட்ட இடத்திலிருந்து மரங்கள் சில அடி தூரம் தள்ளி இருக்கும். காற்றினாலோ,வாழைக்குலையைத் தாங்க முடியாமலோ மரங்கள் சாய்வதைத் தடுக்க இரு மரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டுவதுண்டு.

அழிக்கும் பூச்சிகளும் நோய்களும்


நோய் தாக்கம்
வாழை மரங்கள் கலப்பின விருத்தியில்லாமல் இனப்பெருக்கம் செய்வதால், பல்வேறு வகையான நோய் எதிர்ப்பு மரபணுக்கள் ஒரே இரக வாழையில் இருப்பதில்லை. எனவே வாழை மரங்கள் பல நோய்களால் எளிதில் தாக்கப்படுகின்றன. கறுப்பு சிகடோகாபனாமா நோய் ஆகிய பூஞ்சை நோய்கள்வாழையைத் தாக்கும் முக்கியமான நோய்களாகும். ஃபியூசாரியம் எனும்பூஞ்சையால் உண்டாகும் பணாமாவாடல் நோய் 1950 களில் குரோசு மைக்கேல் எனும் வாழை இனத்தையே அழித்து விட்டது. கறுப்பு சிகடோகா நோய் 1960 களில்ஃபிஜி தீவுகளிலிருந்து ஏற்றுமதியான வாழைப்பழத்தைச் சுற்றப் பயன் படுத்திய இலைகள் மூலம் ஆசியாவெங்கும் பரவியது.
கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுவதால் நச்சுரி நோய்களும் எளிதில் பரவுகின்றன. நுனிக்கொத்து நோய் வாழையை அழிக்கும் முக்கியமன நச்சுரி நோயாகும். நோய் தொற்றிய மரங்களை அழித்து எரிப்பதும், நோயைப் பரப்பும் பூச்சிகளை அழிப்பதுமே இதற்கு தீர்வாகும்.

வாழையைத் தாக்கும் தீ நுண்மங்கள்:

2001 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆண்டிற்கு தோரயமாக ஆயிரம் கோடி டன்ஸ் விளைவிக்கப்படுகிறது [5] வாழையில் ஏற்படும் பக்டேரியாபூஞ்சை, தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகளால், முழு உற்பத்தியில் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இவைகளின் நோய் தாக்குதல்களில், தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகள் எளிதில் நீங்காது மட்டுமல்லாமல், உற்பத்தியெய் கடுமையாக பாதிக்ககூடியன. [6][7]வேதி மருந்துகளினால் பக்டேரியா, பூஞ்சை நோய்களை கட்டுக்குள் கொண்டுவந்தாலும், தீ நுண்மங்களினால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கமுடியாது. ஆகையால் நோயெய் அழிப்பதைவிட, வரும் முன் காப்பதே முக்கியம்.
  • வாழை நுனி மொசைக் நுண்மம்
வாழை நுனி மொசைக் நுண்மம் (Banana bract mosaic virus) [8]: இவைகள் நேர்மறை (+) கொண்ட, ஓரிழை ஆர்.என்.எ தீ நுண்மம் (RNA) ஆகும். இவைகள் போட்டி(Poty) பிரிவில் வருபவை ஆகும்.
  • வாழை குறை மொசைக் நுண்மம் (Banana mild mosaic virus) [9]
  • வாழை தீ நுண்மம் X (Banana virus X (BVX)) [10]
இவை இரண்டும் பிலேக்ஸ்சி விரிடே (Flexiviridae) குடும்பத்தில் வருபவை ஆகும்.
  • வாழை இழை கொத்து தீ நுண்மம் (Banana bunchy top virus) [11]
இவைகள் ஓரிழை உடைய டி.என்.எ ( DNA) தீ நுண்மம் ஆகும். நானோ நுண்மந்தில் (nano virus) என்னும் பிரிவில் வருபவை.
  • வாழை வரி நுண்மம் (Banana streak virus) [12]
பார ரெட்ரோ நுண்மந்தில் (pararetro virus) வருவது. மேலும் மரபு இழையில் உள்ள வேறுபாட்டை பொருந்து, மூன்று வகையாக பிரிக்கலாம்.
வாழை வரி தங்க விரல் நுண்மம் -Banana streak Gold Finger virus (BSGFV),
வாழை வரி மைசூர் நுண்மம்- Banana streak Mysore virus (BSMyV)
வாழை வரி ஒபனோ ல் எவாய் நுண்மம் - Banana streak Obeno L’Ewai virus (BSOLV)
  • வாழை மறு- இறத்தல் நுண்மம் (Banana die-back virus), நைசிரியா என்ற நாட்டில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.[13]
மேலும் தீ நுண்மங்களின் பல்கி பெருகும் போது, அதன் மரபு இழைகள் நகலாக்கம் செய்யப்படுகின்றன. இவ்வினைகளின் ஈடுபடும் நொதிகள் செயல்கள் மிகையாக இருந்தாலும், மரபுஇழைகளின் ஏற்படும் பிழை-ஒற்றுகளை (தவறுகளை) (mis-match) சரி செய்ய முடியாத தன்மையில் உள்ளன (Proof-reading activity). இதனால் ஒரே தீ நுண்மந்தின் மரபு இழைகளின் வரிசையில் பல மாறுதல்கள் அல்லது வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும் ஒரே வாழையெய் வேறுப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பல தீ நுண்மங்கள் தாக்கும் பொழுது, அவைகளிடையெய் ஏற்படும் உள்-இணைவுகள் அல்லது மறு-கலத்தல்கள்(Recombination) புதிய தீ நுண்மங்களை ஏற்படுத்துகின்றன. இவைகள் முன்பை விட வீரியம் கூடுதலாகவும் பெருத்த இழப்புகளையும் ஏற்படுத்த வல்லன.

அறுவடை


அறுவடைக்குரியவாழைக்குலைகள்

அறுவடையான வாழைத்தார்கள்
பழங்கள் முக்கால்வாசி முற்றிய நிலையில் அறுவடை செய்யப்படுகின்றன. பொதுவாக, முதல் சீப்பு தோன்றிய மூன்று மாதங்களில் வாழைத்தார் அறுவடைக்குத் தயாராக இருக்கும். அறுவடையின் போது முழு வாழைத்தாரும் வெட்டப்பட்டு கம்பிகளில் தொங்கவிடப்பட்டு தோட்டத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. உள்நாட்டுச் சந்தைக்கு தார்கள் அப்படியே விற்கப்படுகின்றன. ஏற்றுமதிக்கான வாழைகள் சீப்புகளாக வெட்டப்பட்டு, வாழைப்பால் கறையை நீக்க, 'பிளீச்'(வெளுத்தல்) (சோடியம் கைப்போக்ளொரைட்) கரைசலில் நனைக்கப்படுகின்றன. பின்னர் அவை பத்திரமாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகளில் அடுக்கப்படுகின்றன.

பழுக்க வைத்தல்


மரத்தில் பழுக்கும் வாழைப்பழங்கள்

ஒரு சீப்பு வாழைப்பழங்கள்
  • ஏற்றுமதிக்காகப் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட பழங்களை, தேவைப்படும்போது,எத்திலீன் வாயு மூலம் பழுக்க வைக்கப்பட்டு, விற்பனைக்குத் தயாராக்கப் படுகின்றன.
  • வளரும் நாடுகளில், இயற்கையான பாரம்பரிய ஊதல் முறையில் பழுக்க வைக்கப் படுகின்றன. இம்முறையில் காலதாமதமும், பழங்கள் கனிந்தும் விடுகிறது. கனிந்த வாழைத்தார்களை, பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, அதிலுள்ள பழங்கள் உதிர்ந்து, உழவர்களுக்கு இழப்பைத் தருகின்றன. எனவே, இம்முறையை அதிகம் பயன்படுத்துவதில்லை.
  • தற்போது அதிக விளைச்சல் (இந்தியா) செய்யப்படுவதால், பெரும்பாலும், தார்கள் செங்காய் நிலைக்குச் சற்று முந்தைய, காவெட்டு நிலையிலேயே அறுவடைச் செய்யப்படுகிறது. அத்தார்கள் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படுகிறது.
  • எத்திலீன் வாயுக்கு மாற்றாக, அதே குணமுடைய், ஆனால் தீப்பற்றும் தன்மையுடைய அசிட்டிலீன் வாயு அல்லதுகால்சியம் கார்பைட்(CaC2.) மூலம், பழுக்க வைக்கப் படுகிறது. இது மனித உடலின் செரிமான மண்டலநலத்திற்க்கு, மிகத்தீமை விளைவிக்கக் கூடியது. சில நபர்களுக்குப் புற்றுநோயும் உருவாகிறது.

பயன்பாடு

வாழைப்பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை அட்டவணையில் பார்க்கலாம்.
வாழை (தோல் நீங்கியது)
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 90 kcal   370 kJ
மாப்பொருள்    22.84 g
இனியம்  12.23 g
நார்ப்பொருள்  2.6 g  
கொழுமியம்0.33 g
புரதம்1.09 g
உயிர்ச்சத்து ஏ  3 μg0%
தையாமின் (உயிர். பி1)  0.031 mg  2%
ரைபோஃபிளேவின் (உயிர். B2)  0.073 mg  5%
நையாசின் (உயிர். பி3)  0.665 mg  4%
Pantothenic acid (B5)  0.334 mg 7%
உயிர்ச்சத்து பி6  0.367 mg28%
ஃபோலேட் (உயிர்ச்சத்து பி9)  20 μg 5%
உயிர்ச்சத்து சி  8.7 mg15%
கால்சியம்  5 mg1%
இரும்பு  0.26 mg2%
மக்னீசியம்  27 mg7% 
பாசுபரசு  22 mg3%
பொட்டாசியம்  358 mg  8%
துத்தநாகம்  0.15 mg2%
One banana is 100–150 g.
Percentages are relative to US
recommendations for adults.
Source: USDA Nutrient database

மனித உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
  • வாழைப்பழம் பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகிறது. அண்மையில், பாலுடன் கலந்து கூழாகவும் பருகப்படுகிறது. பனிக்குழை (ice cream), குழந்தைகளுக்கான உணவு மற்றும் பழக்கலவைகளில் பயன் படுத்தப்படுகிறது. பழத்தை உலர வைத்து பொடியாக்கி, மாவுகளுடன் கலந்து பேக்கரி(வெதுப்பகம்) வகை உணவுகள் செய்யப்படுகின்றன.
  • வாழைப்பழத்தில் இயற்கையாகவே சுக்ரோஸ்குளுக்கோஸ்ஃப்ரக்டோஸ் என்ற சர்க்கரை :இருப்பதால் தின்றவுடனே உடலுக்கு சக்தி கிடைக்கும். இது ஒன்றரை மணி நேரம் நாம் வேலை செய்யப் போதுமானதாகும்.
  • வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி-6 நரம்புகளைத் தளர்ச்சி அடைய விடாமல் செய்கிறது.
  • வாழைப்பழத்தில் உள்ள ட்ரைபோடோஃபான் என்னும் ஒருவகை புரதம் நம் உடலில் சேரும்போது செரடோனின் என்ற பொருளாக மாறுகிறது. இது உடலைத் தளர்த்தி மனதை அமைதிப்படுத்தி மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
  • பொட்டாசியம் சத்து அதிகமாகவும், உப்பு சத்து குறைவாகவும் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவாகும்.
  • வாழைப்பழங்கள் 12 'C க்கும் குறைவான வெப்பநிலையில் கருக்கத் தொடங்கிவிடும். எனவே முழு வாழைப்பழங்களை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பது நல்லதல்ல. உரித்த வாழைப்பழங்களை காற்றுப்புகாதவாறு உறைகுளிர் பெட்டியில் நெடுநாட்கள் வைத்திருக்கலாம்.
  • வாழைக்காய் மற்றும் வாழைப்பத்தை மெல்லிய துண்டுகளாக சீவி, வாழைப் பொரிப்புகள்செய்யப்படுகிறது. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவை சமையலுக்கு பயன் படுத்தப்படுகின்றன. வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் ஏற்படும் கற்களை நீக்க வல்லது என நம்பப்படுகிறது.
  • வாழை இலை இந்தியாவில் உணவு உண்ணும் தட்டு போல பயன்படுகிறது.
  • அறுவடைக்குப்பின் எஞ்சியிருக்கும் வாழைமரங்கள் வெட்டி நிலத்தில் சாய்த்து மக்க விடப்படுகின்றன. வாழை மரத்தண்டுகள் உரங்களை சேமித்து வைத்திருப்பதால், இவை நல்ல உரமாகப் பயன் படுகின்றன.
  • வாழைப்பூ, காய், தண்டு முதலியவை சித்த மருத்துவத்திலும் பயனாகிறது. நீரிழிவு என்ற உடற்குறை உள்ளவர்கள், வாழைப்பூ அவியலை உண்பது மிகவும் நல்லது.
  • வாழைப்பட்டைகளை உலர வேத்து அதிலுள்ள நார்களைப் பிரித்தெடுத்து மலர் மாலைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்துவர்.

வாழைப்பழ வகைகள்


இளஞ்சிவப்பு வாழைக்குலை

வாழைப்பழ வகைகள்
  • செவ்வாழை (சிகப்பு நிறத்திலிருக்கும் சற்று பெரிய அளவில் இருக்கும்)
  • ரசுதாளி (இதை யாழ்ப்பாணத் தமிழர் கப்பல் பழம் என்கிறார்கள். சிங்களவர்கள் கோழிக்கூடு என்கிறார்கள். மட்டக்களப்புத் தமிழர் பறங்கிப்பழம் என்கிறார்கள். இவ் வாழைப்பழத்தை பறங்கியர்கள் கோழிக்கோடு துறைமுகத்தினூடு கப்பலில் இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்றும் அதனாலேயே இவ் வாழைப்பழத்துக்கு இத்தனை பெயர்கள் என்றும் கருதப் படுகிறது.) இவற்றைத் தவிர தமிழ் நாட்டு வாழை வகைகளில் மூன்றிற்கு மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெயர்களை சூட்டியுள்ளனர்

மருத்துவ குணங்கள்

  • வாழைப்பூவை சமைத்துண்ணுவதால், நமது செரிமாண மண்டலம் முழுமைக்கும் மிக மிக நல்லது.
  • வாழைப்பழம் பசியை ஆற்றுவதோடு பல்வேறு மனித உபாதைகளுக்கு மருந்தாக இருக்கிறது. குறிப்பாக மொந்தன் பழம் போன்றவை மலச்சிக்கலுக்கு நல்லது. குழந்தைகளுக்கு சிறுவயதில் ஏற்படும் பல் விழும் காலங்களில் ஆடிக்கொண்டிருக்கும் பல்லை, பிடுங்குவதற்கு பதிலாக பெரிய அளவிலான வாழைப்பழம் (மொந்தன் அல்லது ரஸ்தாளி) போன்றவைகளை வலுக்கட்டாயமாக கொடுப்பர். பல் வாழைப்பழத்துடன் சேர்ந்து வயிற்றில் சென்று பிறகு மலத்துடன் வெளியேறிவிடும்.
  • தீப்புண்ணுக்கு வாழைமரத்திலிருந்து எடுக்கப்பட்ட சார் எரிச்சலை குறைக்கும். தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை கொண்டு போர்த்துவது பல்வேறு இடங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது.
வாழைப்பழத்தில் கர்போஹைடிரேட், புரதம், கொழுப்பு முதலான உணவுச் சத்துக்களும் A, B, C வைட்டமின்களும் அடங்கியுள்ளன. சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், சிறிய அளவில் செம்புச்சத்தும் அடங்கியுள்ளன. நார்ச்சத்தும், ரிபோஃபிளேவின், தயாமின் முதலான வைட்டமின்களும் உள்ளன. இதை அப்படியே சாப்பிடலாம். ஐஸ்கிரீம், சாண்ட்விச், தயாரிக்க இந்தப் பழம் பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு வகை பழத்திற்கும் ஒவ்வொரு விசேச பலனும், குணமும் உண்டு. வாழையில் 70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். மலைவாழை சோகையை நீக்கும். பேயன் வாழை குடற்புண் தீர்க்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.
இதைத் தவிர கற்பூர வாழை, நேந்திர வாழை, பூவன் வாழை எனப் பலவகை உண்டு.
பொதுவாக வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது. “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.
உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும். மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது. மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை நீக்க செரோடினின் பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும். தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை மற்றும் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும். இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும். சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும். கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும். உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.
மஞ்சளும், பச்சையுமான நிறங்களுள்ள வாழைப்பழம் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக் கூடியது. இதில் பலவகைகள் அடங்கியுள்ளன. உலர்ந்த சருமத்திற்கு மிகுந்த ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது. எனவே சரும மாஸ்க்குகள், ஹேர் பேக்குகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இப்பழச்சதையினுள் வெண்ணெய் போல ஏறக்குறைய இருபது முதல் இருபத்தைந்து சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது.
தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும். உடலில் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் உண்டாகும்.
தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும். சிறுவர், வாலிபர், வயோதிகர்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி செவ்வாழை பாதியளவு முதல் முழு அளவு வரை தொடர்ந்து 21 தினங்களுக்குக் கொடுத்து வந்தாலே கண் பார்வை படிப்படியாகத் தெளிவடையும்.

பண்பாட்டு முக்கியத்துவம்

வாழைப்பழங்கள் இந்து கடவுள்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டைய இந்தியாவில் வாழை கடவுள்களின் உணவாக கருதப்பட்டது.குறிப்பாக தென்னிந்தியாவில் வாழை இலைகளும் இறைவழிபாட்டில் பயன் படுத்தப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு வாழை இலையில், குறிப்பாக தலை வாழை இலையில் (நுனி இலை) உணவு படைப்பது சிறந்த தமிழ் பண்பாடு. தமிழர்களின் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் கட்டாயம் குலைகளுடன் கூடிய வாழை மரங்களை வாசலில் தோரணமாகக் கட்டுவர்.வீட்டில் வளர்ந்துள்ள வாழை மரங்கள் சாய்ந்தால் அதனைத் தீய அறிகுறியாகக் கருதுவார்கள்.

இலக்கியத்தில் வாழை


வாழைக்காய்களுடன் வாழைப்பூ
இலக்கியத்தில் வாழை அமைந்துள்ள அமைவுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.[14]
(எ.கா) முக்கனியி னானா முதிரையின் (கம்பராமாயணம். நாட்டு. 19).
  • மால்வரை யொழுகிய வாழை (தொல்காப்பியம். சொல். 317, உரை).
  • வாழை யிறுகு குலைமுறுக (மலைபடு. 132)
  • செழுங்கோள் வாழை (புறநானூறு. 168, 13)
  • கோழிலை வாழை (அகநானூறு. 2).
  • மால்வரை யொழுகிய வாழை... என... சேர்ந்து (சிறுபாணாற்றுப்படை. 20, உரை).
  • ததையிலே வாழை (ஐங்குறுநூறு. 460)
  • வாரணபுசை, வீரை (சங். அக.)
  • அற்பருத்தம் - (பச். மூ.)
  • இயைமே - (அக. நி.)
  • வாழைக்கு பல பெயர்களுள்ளன. அவைகளும், அவைக் காணப்படுகின்ற நூல்களும் வருமாறு;-
அம்பணம், கவர், சேகிலி (பிங்கல நிகண்டு)
அரம்பை அரம்பை நிரம்பிய தொல் வரை (கம்பராமாயணம்-வரைக்.59) நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ் கன்றும் உதவும் கனி (நன்னெறி)
கதலி கானெடுந்தே ருயர்கதலியும் ((கம்பராமாயணம்-முதற்போர்.104)
பனசம் வாழை (கம்பராமாயணம். மாரீசன்வதை.96)
குலைவாழை பழுத்த (சீவக சிந்தாமணி. 1191).
மடல் - கொழுமடற் குமரி வாழை (சீவக சிந்தாமணி. 2716). Musa paradisiaca
  • வான்பயிர் = - நன்செய் புன்செய்ப் பயிரல்லாத கொடிக்கால் வாழை கரும்பு முதலிய தோட்டப்பயிர்கள்.
  • வாழைக்கு இருக்கும் வேறுபெயர்கள்
ஓசை²அரேசிகம்கதலம்காட்டிலம்சமி³தென்னிநத்தம் , மஞ்சிபலை , மிருத்தியுபலைபிச்சை³புட்பம்நீர்வாகை, நீர்வாழை (தண்ணீருதவும் வாழை = Ravenala madagascariensis), பானுபலை , மட்டம்முண்டகம்மோசம்வங்காளி , வல்லம்³வனலட்சுமிவிசாலம்விலாசம்அசோகம்,அசோணம்

பழமொழிகள்

  • வாழை வாழவும் வைக்கும் தாழவும் வைக்கும்
  • வாழப்பழ சோம்பேறி

மல்லி மற்றும் முல்லை 

மல்லிகை' (Jasminum sambac) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது இந்தியாஇலங்கை,தாய்லாந்துமியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது. மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.
தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை "வன மல்லிகை. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை/பாம்பே வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றே அழைக்கப்படுகிறது.
ஜாஸ்மினம்[1] என்று பண்டைய ஃபிரஞ்சு[2] மொழியிலும் அரபியில் ஜாஸ்மின் என்றும் பாரசீக மொழியில் யாஸ்மின்என, அதாவது "கடவுளின் பரிசு"[3][4][5] எனப் பொருள்படுவதாக, அழைக்கப்படும் மல்லிகை ஒரு ஆலிவ் குடும்பமான ஒலிசியே என்னும் புதர்கள் மற்றும் கொடிகள் சார்ந்த ஒரு பேரினம். இதில் மொத்தமாக 200 இனங்கள் உள்ளன. இவை பண்டைய உலகில் (அதாவது அமெரிக்கா என்னும் நாடு கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஐரோப்பியர்கள் அறிந்திருந்த உலகப் பகுதிகள்) மிதமானது முதல் அதிகரித்த வெப்ப மண்டலங்களில் வளரும் இனமாகும். இதில் பல இனங்களும் பிற செடிகளின் மீதாகப் பற்றிப் படரும் கொடிகளாகவும் தோட்டங்களில் கம்பிகளின் மீதாகப் படர்ந்தோ அல்லது கதவுகள் அல்லது வேலிகள் மீதான வேலிப்பந்தலாகவோ அல்லது திறந்த வெளிகளில் புதர்களாகவோ உள்ளன. இவற்றின் இலைகள் என்றும் பசுமை மாறாமலோ (அதாவது வருடம் முழுதும் பச்சையாகவே) அல்லது (கூதிர்ப் பருவத்தில் உதிரும்) உதிரிலைகளாகவோ இருக்கலாம்

இனங்கள்

இதில் பின்வரும் இனங்கள் அடங்கும்:
  • ஜாஸ்மினம் அபிசினியம் ஹொகெஸ்ட். எக்ஸ் டிசி. – காட்டு மல்லி
  • ஜாஸ்மினம் அடின்னோஃபில்லம் சுவர் – பின்வீல் ஜாஸ்மின், பிளூகிரேப் ஜாஸ்மின், பிரின்சஸ் ஜாஸ்மின், செ வாங்க், லாய் லா கோ டுயென்[6]
  • ஜாஸ்மினம் டிகோடோனம் வாஹில் – தங்கக் கடற்கரை மல்லிகை[7]
  • ஜாஸ்மினம் கிராண்டிஃபிளோரம் L. – ஸ்பானிசிய ஜாஸ்மின்,[7] ராயல் ஜாஸ்மின்,[7] காட்டலோனியன் ஜாஸ்மின்[7]
  • ஜாஸ்மினம் ஹியுமைல் எல். – இத்தாலிய மஞ்சள் மல்லிகை[7]
  • ஜாஸ்மினம் லான்சியோலாரியம் ராக்ஸெப்.
  • ஜாஸ்மினம் மென்சியி ஹான்ஸ் – ஜப்பானிய மல்லிகை,[7] மஞ்சள் வண்ண மல்லிகை,[7] மஞ்சள் ஜாஸ்மின்[7]
  • ஜாஸ்மினம் நெர்வோசம் லௌர்.
  • ஜாஸ்மினம் ஓடோராடிசியம் எல். – மஞ்சள் மல்லிகை[7]
  • ஜாஸ்மினம் அஃபிசினேலி எல். – வழக்கமான மல்லிகை,[7] கவியின் மல்லிகை,[7] ஜாஸ்மின்,[7] ஜெஸாமின்[7]
  • ஜாஸ்மினம் பார்கெரி டுன் – குள்ள மல்லிகை[8]
  • ஜாஸ்மினம் பாலியாந்தம் ஃபிராஞ்ச்.
  • ஜாஸ்மினம் சாம்பாக் (எல்.) ஐட்டன் – அராபிய மல்லிகை[7]
  • ஜாஸ்மினம் சினென்சி ஹெம்செல்.
  • ஜாஸ்மினம் யூரோஃபில்லம் ஹெம்செல்.

பயிரிடலும் பயன்பாடுகளும்

வணிக ரீதியாக மலர்களுக்காகப் பரவலாகப் பயிரிடப்படும் மல்லிகையை வீட்டுத்தோட்டத்தில் பூசைக்காகவும் பெண்கள் தலையில் சூடிக்கொள்ளவும் வளர்க்கப்படுகிறது.

மல்லிகைத் தேநீர்

சீனாவில் ஜாஸ்மின் தேநீரைப் பருகுகின்றனர். அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர் (茉莉花茶; பின்யின்: மோ லி ஹுவா ச்சா) என்றழைக்கிறார்கள்.ஜாஸ்மினம் சாம்பாக் மலர்களும் மல்லிகைத் தேநீர் உருவாக்கப் பயன்படுகின்றன. இது பெரும்பாலும், பச்சைத் தேநீர் என்பதன் அடிப்படையில் அமைந்தது. ஆனால், சில நேரங்களில் ஓலாங்க் அடிப்படையும் பயன்படுகிறது. வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பசை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் இயந்திரங்களில் மலர்கள் மற்றும் தேயிலை ஆகியவை "இணைவுறுத்தப்படுகின்றன". மல்லிகை மலரின் வாசம் மற்றும் நறுமணம் ஆகியவற்றை உட்கிரகிப்பதற்குத் தேயிலைக்கு நான்கு மணி நேரங்கள் பிடிக்கும். மிக உயர் தரங்களுக்கு இந்த செய்முறையானது ஏழு முறைகள் வரையிலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும். காரணம், மலர்களின் உள்ளார்ந்த ஈரப்பசையை தேயிலை உட்கிரகித்து விட்டால், அது கெடாதிருக்க அதனை மறுதீயிட வேண்டும். பயனபட்டு விட்ட மலர்களை இறுதிப் பொருளிலிருந்து நீக்கலாம் அல்லது நீக்காமலும் விடலாம். காரணம் இந்த மலர்கள் முழுதும் வறண்டு வாசமற்றே இருக்கும். அடர்த்தி மிகுதியான தேயிலைகளிலிருந்து இதழ்களை ஊதி நீக்குவதற்கு ராட்சசக் காற்றாடிகள் பயன்படுகின்றன. தேயிலையில் இவை இருந்தாலும் பார்வைக்கு அதன் அழகைக் கூட்டுவதைத் தவிர, தேயிலையின் தரத்திற்கு எந்த விதமான சுட்டிக்காட்டலையும் வழங்குவதில்லை.

மல்லிகை இனிப்புக் கூழ்

ஃபிரெஞ்சு நாட்டில் மல்லிகை இனிப்புக் கூழ் புகழ் பெற்றது. பெரும்பாலும், மல்லிகை மலர்ச் சாறிலிருந்தே இதனைச் செய்கிறார்கள். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இந்த ஃபிரெஞ்சு மல்லிகை இனிப்புக் கூழ் சிறு ரொட்டி மற்றும் இனிப்பு மிட்டாய்களை உருவாக்கப் பயன்படுகிறது.

மல்லிகைச் சார எண்ணை

மல்லிகைச் சார எண்ணை பொதுவான பயன்பாடுகள் கொண்டுள்ளது.
தொழிலாளர்கள் மிக அதிகமாகத் தேவைப்படும் உறிஞ்சு முறைமையிலோ அல்லது வேதிப் பிழிவு முறைமையிலோ இதன் மலர்களைப் பிழிகின்றனர். ஒரு சிறு அளவிலான எண்ணைக்கும் மிக அதிகமான அளவில் மலர்கள் தேவைப்படுவதால், இது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. மலர்களை இரவிலேயே கொய்ய வேண்டும். காரணம், மல்லிகையின் வாசம் இருள் கவிந்த பின்னர் மேலும் வலிமை கொள்வதாகும். மலர்களை ஆலிவ் எண்ணையில் தோய்த்துப் பருத்தி ஆடைகளின் மீது பல நாட்களுக்குக் காய வைத்துப் பிறகு மெய்யான மல்லிகைச் சாறைப் பெறுவதற்குப் பிழிந்தெடுக்கின்றனர். இத்தகைய மல்லிகைச் சார எண்ணை தயாரிக்கும் நாடுகளில் சில இந்தியா, எகிப்து, சீனா மற்றும் மொரோக்கோ ஆகியவை.

வாசனைத் திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களில் பயன்படும் மல்லிகைத் தனிமானி

இதன் வேதியியல் உட்பொருட்கள் மெதில் ஆந்த்ரனிலேட், இன்டோல், பென்ஜில் ஆல்கஹால், லினாலூல் மற்றும் சிகேடோல் ஆகியவற்றை உள்ளடக்கும். மல்லிகையின் பல இனங்கள் ஒரு தனிமானியையும் நல்குகின்றன. இது வாசனைத் திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் உருவாக்கப் பயன்படுகிறது.

கலாசார முக்கியத்துவமும் இதர தகவல்களும்


12ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜாவோ சாங்க் என்னும் சீனக் கலைஞர் மசி மற்றும் வண்ணம் கொண்டு பட்டுத்துணியில் வரைந்த வெண்ணிற மல்லிகைக் கொடி
பின்வரும் நாடுகளில் மல்லிகை தேசிய மலர் என விளங்குகிறது.
  • ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அது தேசிய மலராகும். இங்கு அது சமப்கியுட்டா என்று வழங்குகிறது. பொதுவாக, மத ரீதியான பிம்பங்களுக்குச் சூட்டப்படும் மாலைகளில் பயன்படுகிறது.
  • இந்தோனேஷியா நாட்டில் ஜாஸ்மின் சாம்பக் இனம் "புஷ்ப பங்க்ஸா "வாக (தேசிய மலர்) "மெலட்டி " என்னும் பெயர் கொண்டுள்ளது இந்தோனேஷியாவின் பழங்குடியினருக்கு, குறிப்பாக ஜாவா தீவில் வசிப்போருக்கு, திருமணம்போன்ற நிகழ்வுகளில் இது முக்கியமான மலராகும்.
  • பாகிஸ்தான் நாட்டில் ஜாஸ்மினம் அஃபிசினேலி , "சம்பேலி " அல்லது "யாஸ்மின் " என அழைக்கப்படும் இது அந்நாட்டின் தேசிய மலர் ஆகும்.
சிரியா நாட்டில் இது டமாஸ்கஸ் நகரின் குறியீட்டு மலராகும். இந்த நகரே மல்லிகை நகர் என அழைக்கப்படுகிறது.
ஜே.ஃபிளூமினென்ஸ் , ஹவாய் நாட்டில் ஒரு ஊடுருவி இனம் என்பதாக உள்ளது. இங்கு இது சில நேரங்களில், அவ்வளவாகத் துல்லியமற்றதான, "பிரேசிலியன் மல்லிகை" என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
ஜே.டிகோட்டம் என்பது ஃபுளோரிடாவிலும் ஊடுருவியுள்ளது.
தாய்லாந்து நாட்டில், மல்லிகை மலர்கள் அன்னை என்னும் கருத்துருவின் சின்னமாகப் பயன்படுகின்றன.
ஜப்பான் நாட்டின் ஓகினாவாவில், மல்லிகைத் தேநீர் சன்பின் ச்சா (さんぴん茶) எனப்படுகிறது.

இந்தியாவில் மல்லிகையின் கலாசார முக்கியத்துவம்


இந்தியாவின் தமிழ் நாட்டில் சாமல்பட்டி யில் ஒரு மல்லிகை விற்பனையாளர்

ஊசிமல்லிச் சரம்
  • இந்தியாவில் மல்லிகை மலரை, அதன் இன வகையைப் பொறுத்து, பல மொழிகளிலும், சில இடங்களில் ஒரு பெயராகவும், பிறவற்றில் வேறு பெயர்களிலுமாக பல பெயர்களில் வழங்குகின்றனர். அவற்றில் சில பின்வருமாறு:
சமிஸ்கிருத மொழியில் "மாலதி " அல்லது "மல்லிகா "
இந்தி மொழியில் "சமேலி ", "ஜூஹி ", அல்லது "மோத்தியா " என வழங்குகிறது. இறுதியாகக் கூறப்பட்டது சிறு புதர்களாகவும் சில நேரங்களில் கொடியாகவும் வளரும் ஒரு அடர் வகையாகும்.
"மோத்தி " என்னும் சொல், (சமிஸ்கிருத மொழியில் "முக்தா " அல்லது "முக்தாமணி " அல்லது "மௌடிகா " எனப்படுகிறது. (முக்தா என்பதற்கு சுதந்திரமான, தளைகளற்ற என்னும் ஒரு பொருளும் உண்டு). இந்தி மொழியில் இது முத்து எனப் பொருள்படும். இந்த மலர் வெண் நிறம் கொண்டு, வட்ட வடிவமாக, அழகு மிகுந்து பார்வையிலும் அழகிலும் முத்துக்களை ஒத்திருப்பதால் "மோத்தியா " என்னும் பெயர் பெற்றது.
மராத்தி மொழியில், "ஜாயீ ", "ஜூயீ ", "சாயாலீ ", "சமேலி " அல்லது "மொகாரா " என இதனை வழங்குகின்றனர். இறுதியாகக் கூறியது இந்தியில் "மோத்தியா " என்பதாகும். முதலாவது சிற்றிலைகளும், பெரிய இதழ்களும் கொண்டுள்ளது. இரண்டாவது இதற்கு நேர்மாறானது. மூன்றாவது குழமத் தன்மை கொண்டது (மராத்தி மொழியில் சாய் என்பது குழமம் எனப் பொருள்படும்). நான்காவது பிறிதொரு வகையாகும்.
வங்காள மொழியில் "ஜூயி "
தெலுங்கு மொழியில் "மல்லே "
  • இந்தியா முழுவதிலும், குறிப்பாக ஆந்திரப் பிரதேசம்கர்நாடகம்மஹாராஷ்டிராதமிழ்நாடு போன்ற மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் (ரோஜா மற்றும் இதர மலர்களைப் போல பிரபலமாக) இல்லத்து பூசைகளிலும், (இல்லத்துப் பெண்களும் சிறுமிகளும்) தலையில் சூடிக் கொள்ள வீட்டுத் தோட்டங்களிலும், வீட்டைச் சுற்றிலும் பானைச் செடியாகவும் வளர்க்கின்றனர். மேற்கூறிய அனைத்துப் பயன்பாடுகள் மற்றும் (வாசனைத் திரவியத் தொழில் போன்ற) இதரப் பயன்பாடுகளுக்காக விவசாய நிலங்களில் விற்பனைக்காகவும் பயிராகிறது. தெலுங்கு மொழியில் இதை மல்லே என அழைக்கின்றனர். இரு மலரொட்டியுள்ள மல்லிகை குண்டு மல்லே எனப்படுகிறது.
  • மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை தொடங்கி தெற்காக இந்தியாவின் பல இடங்களிலும் மல்லிகை மலரை விற்போர், நகர வீதிகள், கோயில் சுற்றுப்புறங்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பெரும் வணிகவிடங்கள் போன்றவற்றில் அதனை ஆயத்த மாலைகள் என்றாகவோ அல்லது மோத்தியா அல்லது மொகாரா என்னும் அதன் அடர் வகையின் மலர்க் கொத்துக்களை அவற்றின் எடையின் அடிப்படையிலோ விற்பதைக் காணலாம். இது கொல்கொத்தாவிலும் அன்னியமான காட்சியல்ல. வடமாநிலப் பெண்களும் சிறுமிகளும் பொதுவாக கூந்தலில் மலர்களைச் சூடுவதில்லை என்பதால், தெருவோர விற்பனைகள் அங்கு குறைவாகவே காணப்படும்.
  • மல்லிகை மலரைப் பெண்டிர், அதன் மணம் மற்றும் அழகுக்காகவே தம் கூந்தலில் சூடுகின்றனர். மேலும், இது திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் மலர் அலங்காரங்களுக்கும் பயன்படுகிறது.
  • இந்தியா வின் கர்நாடக மாநிலத்தின் பங்களா பகுதியில் பயிராகும் மல்லிகை மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது

கனகாம்பரம் 



கனகாம்பரம் என்னும் இத்தாவரத்தின் அறிவியற் பெயர் க்ராசோண்ட்ரா இன்ஃபண்டிபிலிபார்மிசு என்பதாகும். இத்தாவரம் அகாந்திசியேக் குடும்பத்தைச் சார்ந்ததாகும்.[1]. இவை பெரிதும் அறியப்பட்டது அதுக் கொணரும் மலர்களால் தான். இவை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இதை வீடுகளில் அழகுக்காகவும், வணிகத்திற்காகவும் வளர்க்கிறார்கள். இம்மலர்த்தாவரம் தென்னிந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக அதன் மலர்கள் காவி,இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்று கண்ணைக்கவரும் வண்ணங்களில் காட்சித் தருவதேயாகும். இவை ஆண்டுத்தோறும் எக்காலமும் குறிப்பிட்டு வகையராமல் என்றும் பூக்கும் தாவரமாகும். இதை பெண்டுகள் தலையிற் சூடிக்கொள்ளவும், மாலைகளில் பிற மலர்களுடன் சேர்த்துப் பிண்ணவும், வழிபாட்டின் போது பயன்படுத்தியும், பிற அலங்காரப் பொருட்களிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.
குளிர் காலத்தில் வாடியும் வதங்கியும் காணப்படுகின்ற வெப்பச் சூழ்நிலைக்கு ஏற்றத் தாவரமாகும். இதை தொட்டிகளில் வளர்க்கும் பழக்கமும் காணப்படுகிறது. இதன் மலர் 3-4 சமச்சீரற்ற இதழ்களைக் கொண்டுக் காணப்படுகிறது. இவைப் புதருப்போல் மண்டி கொத்துக்கொத்தாய் பூத்துக் குலுங்கும் தன்மையது. இத்தாவரத்தை ஆங்கிலத்தில் ஃப்யர்க்ராக்கர் ஃப்ளவர் என விளிக்கிறார்கள். இதற்கு காரணம் இவற்றின் விதைகள் முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறி செடியிலிருந்துக் கீழே விழுகிறது. இது இவ்வாறு பல இடங்களுக்கும் பரவுகிறது [2]. இதனை மராத்தியில் ஆபோலி (आबोली) எனவும் அழைக்கின்றனர்.

படத்தொகுப்பு

No comments:

Post a Comment

- Copyright © VELAYUDHAM developer - velayudham - Powered by Blogger - Designed by velayudham -